இதயத்தை நொறுக்கும் காசா செய்தி - உலகையே பதறவைக்கும் வீடியோ

Update: 2024-08-19 15:02 GMT

காசாவில் இஸ்ரேல் வீசும் குண்டுகளால் மக்கள் கொல்லப்படுவதோடு, நோய்களும் அவர்களை வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது அச்சத்தை உறுதி செய்யும் வகையில் காசாவில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்காத 10 மாத குழந்தைக்கு போலியோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் கொடூரமான வைரஸ் பொதுவாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும். இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, அங்கிருக்கும் தாய்மார்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காசாவில் போதிய மருந்துகள் இல்லாத வேளையில், தங்கள் குழந்தைகள் முடமாகி, இறக்கும் வரையில் இந்த கொடுமையை பார்க்க வேண்டுமா என தாய்மார்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்