இஸ்ரேலின் ரகசிய ஏஜெண்டுகள் செய்த சினிமாவையே விஞ்சிய ரியல் சம்பவம்- அத்தனை செக்யூரிட்டையும் மீறி உருண்ட 3 தலைகள்.. எப்படியா பண்ணீங்க.. அதிர்ச்சியில் உலகம்
ஜெனினில் உள்ள இபின் சினா மருத்துவமனையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது... இஸ்ரேலிய சிறப்புப் படையினர் செவிலியர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு நோயாளி போல் மாறுவேடமிட்டு உள்ளே நுழைந்து மனிதாபிமான சட்டத்தை மீறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முஹம்மது ஜலம்னா, முஹம்மது அய்மன் கஜாவி மற்றும் பாஸல் அய்மன் கஜாவி ஆகிய 3 பாலஸ்தீனியர்களை கொலை செய்ததாக பாலத்தீனிய தேசிய முன்முயற்சியின் தலைவர் முஸ்தபா பர்கவுதி குற்றம் சாட்டியுள்ளார்... இந்த 3 பேரும் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது... இந்த கொடூரமான கொலைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று சாடியுள்ள பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம், இஸ்ரேல் படைகளின் தினசரி குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர ஐநா பொதுச்சபை, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.