நெதன்யாகு வெளியிட்ட வீடியோ.. "முக்கிய தலை சாகவில்லை?" - உலகையே மிரளவிட்ட திடீர் ட்விஸ்ட்

Update: 2024-10-09 14:22 GMT

லெபனான் மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய நெதன்யாகு, நஸ்ரல்லாவை அழித்த பிறகு, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு, பல ஆண்டுகள் பின் தங்கி பலவீனமடைந்துவிட்டதாக கூறினார். நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்ப இருந்த ​ஹி​ஸ்புல்லாவின் அடுத்தக் கட்ட தலைவர்களை இஸ்ரேலிய படைகள் கொன்றுவிட்டதாக நெதன்யாகு தெரிவித்தார். லெபனான் மக்களை, ஹிஸ்புல்லாவிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும், லெபனான் மீண்டும் அமைதியான நாட்களுக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நஸ்ரல்லாவின் வாரிசுகளை கொன்றுவிட்டதாக, பெயரை குறிப்பிடாமல் நெதன்யாகு கூறிய நிலையில், ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பான டேனியல் ஹிகாரி, சஃபிதீன் மரணத்தை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்தார். எனினும் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் 6 முக்கிய தலைவர்கள் உள்பட 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்