எல்லை மீறிய வக்கிர கும்பல்... தொடர் டார்ச்சர்... விளாசி எடுத்த வினி ராமன்

Update: 2023-11-21 14:47 GMT

உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், தனக்கு சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க மெசேஜ்கள் வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவி கூறியுள்ளார். இந்திய வம்சாவளியான வினி ராமன், ஆஸ்திரேலியா வென்றதால் தரக்குறைவாக தனக்கு மெசேஜ் அனுப்பப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த, தனது கணவர் விளையாடும் அணியை ஆதரித்தவாறு இந்தியராகவும் இருக்கலாம் எனக் கூறியுள்ள வினி ராமன், தரக்குறைவாக மெசேஜ் அனுப்புவோர் இந்த சீற்றத்தை உலகின் முக்கியமான பிரச்சினைகளில் காட்ட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்