யாரை சொல்லுகிறார் டிரம்ப்? | donald trump

Update: 2024-10-15 05:05 GMT
  • வெளிநாட்டு எதிரிகளை விட, உள்ளிருந்து வரும் எதிரி மிகவும் ஆபத்தானவர்கள் என அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டொனால்ட் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது, தேர்தல் நாள் அமைதியற்றதாக இருக்கலாம் என அதிபர் ​ஜோ பைடன் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ஜோ பைடனுக்கு நாட்டில் நடப்பது எதுவுமே தெரியவில்லை என்றும், ஒரு நாளின் பெரும் பகுதி அவருக்கு தூக்கத்திலேயே கழிவதாகவும் விமர்சித்தார். உண்மையான அச்சுறுத்தால் நாட்டிற்கு உள்ளேயிருந்து வருவதாக கூறிய அவர், குறிப்பாக தீவிர இடதுசாரிகளிடமிருந்து வருவதாக தெரிவித்தார். ரஷ்யா, சீனா போன்ற வெளிநாட்டு எதிரிகளைவிட, உள்ளே இருக்கும் எதிரிகள் ஆபத்தானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்