போரில் இப்படி ஒரு திருப்பமா?..இஸ்ரேலுக்கு பலம் கொடுக்கும் அமெரிக்கா - வெளியானது பகீர் செய்தி

Update: 2023-10-29 09:08 GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளை அழிக்கும் இஸ்ரேலுக்கு தங்கள் உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர். இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவில் குடியரசுக் கட்சி யூத கூட்டணி நடத்திய நன்கொடையாளர்கள் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றது. சுமார் ஆயிரத்து 500 நன்கொடையாளர்கள் லாஸ் வேகாசில் கூடி இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தினர்... குடியரசுக் கட்சியின் டிரம்ப் மற்றும் பிற அதிபர் வேட்பாளர்கள் ஹமாஸை அழிக்க இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தனர். மற்றும் இப்பிரச்சினைக்குக் காரணம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தான் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்