கனமழை காரணமாக வட சீனாவின் பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 3 லட்சம் ஹெக்டோர் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 11 ஆயிரம் வேளாண் நிபுணர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 72 விவசாய இயந்திர அவசர இயக்க சேவை குழுக்கள் களத்தில் இறங்கி விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர்.