இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோட்டபய ராஜபக்சே

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-02 02:14 GMT
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை, ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. அந்நாட்டில் அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், இறக்குமதி செய்ய முடியவில்லை. நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்.பின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பல தரப்பிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்