ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரியுங்கள் - உக்ரைன் அதிபர்
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கான அழுத்தத்தை அதிகரிக்குமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பால் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் எதிர்காலத்தைப் பற்றி யாரும் பேசவில்லை என்றும், அனைவரும் உக்ரைன் மக்களுக்காக மட்டுமே குரல் கொடுத்து, போர் நிறைவுற்றதும் உக்ரைனுக்கு உதவ அனைவரும் தயராக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.