உக்ரைன் - ரஷ்யா போர் : கோகோ கோலா-பெப்சி நிறுவனங்கள் அதிரடி
கோகோ கோலா மற்றும் பெப்சி ஆகிய 2 குளிர்பான நிறுவனங்களும் ரஷ்யாவுடனான தங்கள் வணிகத் தொடர்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.
உக்ரைன் மீதான படை எடுப்பால், கோகோ கோலா மற்றும் பெப்சி ஆகிய 2 புகழ்பெற்ற குளிர்பான நிறுவனங்களும் ரஷ்யாவுடனான தங்கள் வணிகத் தொடர்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.
கடந்த 2021ம் ஆண்டில், கோகோ கோலாவின் நிகர வருவாயில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முறையே 1 மற்றும் 2 சதவீத பங்காற்றியுள்ளதாக கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் மனசாட்சியற்ற தாக்குதல்களைத் தாங்கி வரும் உக்ரைன் மக்களுக்கு தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோகோ கோலா மட்டுமல்லாது பெப்சி நிறுவனமும் ரஷ்யாவில் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகிய 2 நிறுவனங்களும் ரஷ்யாவில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்களை தற்காலிகமாக மூடப்போவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.