ராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா - பட்ஜெட்டில் 230 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

சீனா இந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 230 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

Update: 2022-03-05 08:45 GMT
உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் நடப்பாண்டிற்கான சீன அரசின் வரவு செலவு திட்டம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சீன ராணுவத்திற்கு கடந்த ஆண்டை விட 7 புள்ளி ஒரு சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சீனா தனது ராணுவத்திற்கு கடந்த ஆண்டு 209 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 230 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்