“ரஷ்ய ஆதரவைக் கைவிட வேண்டும்“ - இந்தியாவிடம் கூறும் அமெரிக்கா
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு ஆதரவாக ஐ.நாவில் இந்தியா செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு ஆதரவாக ஐ.நாவில் இந்தியா செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு அவையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டனம் செய்யும் தீர்மானத்தை கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா தாக்கல் செய்தது. இதன் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. ஐ.நா பொதுச் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கண்டனத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணைச் செயலாளார் டோனால்ட் லூ, ரஷ்ய ஆதரவு நிலையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். குவாட் கூட்டமைப்பு நாடுகளில், இந்தியாவைத் தவிர இதர மூன்று உறுப்பினர் நாடுகளும், ரஷ்யாவை கண்டனம் செய்யும் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று காணொலி மூலம் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில், உக்ரைனில் நடைபெறுவதைப் போல, இந்தோ பசிபிக் பகுதியில் நடக்க அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.