சிக்கலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - ராஜினாமா செய்யக் கோரும் எதிர்கட்சிகள்

உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வர்களின் ரகசிய சொத்துகள் பற்றி அம்பலப்படுத்தும் பன்டோரா ஆவணங்களினால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-05 12:33 GMT
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வர்களின் ரகசிய சொத்துகள் பற்றி அம்பலப்படுத்தும் பன்டோரா ஆவணங்களினால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

உலகெங்கும் உள்ள,  300க்கும் மேற்பட்ட தலைவர்கள், கோடீஸ்வர்களின் ரகசிய சொத்து குவிப்புகள், வரி ஏய்ப்புகள், வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய தகவல் அடங்கிய, சுமார் 1.1 கோடி டிஜிட்டல் கோப்புகள் அடங்கிய தொகுப்பை, சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 700 அரசியல் தலைவர்கள், கோடீஸ்வர்கள், ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள், ஊடக நிறுவன உரிமையாளர்கள் பற்றிய பற்றிய ஆவணங்களும் உள்ளன.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள், பாகிஸ்தான் தேசிய வங்கியின் தலைவர், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016இல் வெளியான பனாமா ஆவணங்களின் மூலம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் வழக்கு பதிவாகி, அவர் பதவி இழக்க நேர்ந்தது. அதைப் பயன்படுத்தி, இம்ரான் கான் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில் இம்ரான் கான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்