அமெரிக்க எல்லையில் ஹைதி மக்கள் தஞ்சம் - உணவின்றி தவிக்கும் அவல நிலை

அமெரிக்க மெக்சிகோ எல்லையில் தஞ்சம் புகுந்துள்ள ஹைதி நாட்டு அகதிகள் உணவின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-20 06:41 GMT
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான ஹைதி மக்கள் குவிந்து தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். கையில் பணமிருந்தும் உணவு வாங்க முடியவில்லை என்று கவலை கொள்ளும் அவர்கள், குழந்தைகளும் கர்ப்பிணிகளும் உணவின்றி பட்டினி கிடப்பதாக கண்ணீர் சிந்துகின்றனர். அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், மெக்சிகோவுக்குள் நுழையவும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தடை விதிப்பதாகப் புலம்புகின்றனர். இதனால், தாங்கள் எங்குதான் செல்வது என்ற ஏக்கத்தோடு எல்லையில் காத்துக் கிடக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்