ஆப்கானில் மனித உரிமை பிரச்சினைகள் - பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் சம்மதம்

ஆப்கானில் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் இடம் அளித்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-18 08:16 GMT
ஆப்கானில் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் இடம் அளித்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர், ஃபிலிப்போ க்ராண்டி இஸ்லாஅமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசுகையில், மனித உரிமை பிரச்சினைகள், சிறுபான்மையினர். பெண்கள் உரிமைகள் குறித்து ஆலோசனை நடத்த தலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், பல இடங்களில் பெண்கள் உட்பட ஆப்கானியர்கள் பலர் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என்று தலிபான் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் க்ரான்டி உறுதியளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்