சீனாவில் வாழ்விடம் திரும்பும் யானைகள் - உலகை ஈர்த்த யானைகளின் பயணம்
சீனாவில் ஓராண்டுக்கும் மேலாக பயணம் செய்த யானைகள் மீண்டும் தங்களுடைய இருப்பிட வனப்பகுதிக்கே வந்துள்ளன.
சீனாவில் ஓராண்டுக்கும் மேலாக பயணம் செய்த யானைகள் மீண்டும் தங்களுடைய இருப்பிட வனப்பகுதிக்கே வந்துள்ளன. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.யுயான்ஜியாங் ஆற்று பாலத்தை களைப்புடன் கடக்கும் இந்த யானைகள், சீனாவில் போவோமா ஊர்கோலம் என ஓராண்டுக்கு முன்பு தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வெளியேறிய யானைகள்.மியான்மர் எல்லையையொட்டிய சீனாவின் யூனான் மாகாண வனப்பகுதியிலிருந்து 16 ஆசிய யானைகள் வெளியேறின. அங்கிருந்து பெரும் மலைகளையும், ஆறுகளையும், வயல்வெளிகளையும் மனம்போன போக்கில் கடந்த யானைகள், பிடித்தமான உணவுகளை ருசித்ததுடன், நீர்நிலைகளில் உற்சாக குளியலிட்டன. மனிதர்கள் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி, யானைகள் வரிசையாக மேற்கொண்ட பயணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றது. யானைகளின் இந்த அழகு பயண காட்சிகளை பார்த்த பலரும் இதயங்களை பறக்கவிட்டன.இவ்வாறு 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் நடந்த யானைகள் குன்மிங் நகரை சென்றடைந்தன. அப்போது யானைகள் வாழ்விடம் தேடி நகர்வதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். யானைகளை தொடர்ந்து கண்காணித்த சீன அரசு, அவை ஏற்படுத்திய சேதம் காரணமாக 80 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பசுமையான திசை நோக்கி பயணித்த யானைகள் இப்போது, யூனான் மாகாணத்தில் உள்ள தங்களுடைய வாழ்விடம் நோக்கி பயணிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மலைகளுக்கு மத்தியில் யுயான்ஜியாங் ஆற்றை கடந்து யானைகள், மீண்டும் தாங்கள் வசித்த காட்டுக்குள் செல்வதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.