50 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு - தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்
அர்ஜென்டினாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது.
இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரமாக உயர்ந்தது. இருப்பினும் அந்நாட்டு அரசு ஊரடங்கைத் தளர்த்தும் முடிவை அறிவித்துள்ளது. இரண்டாவது டோசிற்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பற்றாக்குறையால், அதற்கு மாற்றாக மாடெர்னா அல்லது ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகளை செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் மக்கள் தொகை 4 கோடியே 50 லட்சமாக உள்ள நிலையில், அதில், 2 கோடியே 58 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 79 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.