ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உருமாறிய ரகங்களுக்கு எதிராக செயல்படுகிறது - இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, உருமாறிய கொரோனா வைரஸ் ரகங்களுக்கு எதிராக செயல்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
"
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, உருமாறிய கொரோனா வைரஸ் ரகங்களுக்கு எதிராக செயல்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கமலெயா இன்ஸ்டிடியூட் (Gamaleya institute) உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு செல்களை ஸ்புட்னிக் வி தடுப்பூசி உருவாக்குவதாக கமலெயேயா இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகளில், மிக ஆபத்தான அளவில் நோய் தொற்றுதல் ஏற்படுவதை தடுப்பதில் 91.6 சதவீத செயல் திறன் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விநியோகத்தை ஹைதிராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இதை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுக்கு 30 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ள சீரம் இன்டிடியூட் நிறுவனத்தில் இருந்து முதல் தொகுப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதுவர் நிக்கொலே குடஷேவ் தெரிவித்துள்ளார்.