நெருங்கி வரும் பக்ரீத் திருநாள்; மாடியில் வளர்க்கப்பட்ட பசு - கிரேன் மூலம் கீழிறக்கம்

பாகிஸ்தான் மாநிலம் கராச்சியில், பக்ரீத்தை முன்னிட்டு, மாடியில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று கிரேன் உதவியுடன் கீழிறக்கப்பட்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

Update: 2021-07-13 08:43 GMT
பாகிஸ்தான் மாநிலம் கராச்சியில், பக்ரீத்தை முன்னிட்டு, மாடியில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று கிரேன் உதவியுடன் கீழிறக்கப்பட்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். உலகம் முழுதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் எனும் பக்ரீத் நெருங்கி வருகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு அனைவருக்கும் பங்கிடுவது வழக்கம். அந்த வகையில், சையது இஜாஸ் அஹமது என்பவரால் தனது குடியிருப்பின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்ட பசுவை கிரேன் உதவியுடன் கீழிறக்கினார். இது குறித்து இஜாஸ் அகமது தெரிவிக்கையில், கன்றாக இருக்கையில் மொட்டை மாடிக்கு கொண்டு சென்றதாகவும், தற்போது முழுமையாக வளர்ந்து விட்டதால், கீழிறக்க முடியவில்லை எனக்கூறி கிரேன் உதவியுடன் இறக்கியதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்