சிட்னி நகரில் கொரோனா பரவல் - ஜூன் 26 முதல் முழு ஊரடங்கு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. டெல்டா வகை வைரஸால் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கொரோனா பரவல் காரணமாக ஜூன் 26ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேலஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.திங்கள் அன்று 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய தினத்தை விட இது 45 சதவீதம் அதிகமாகும்.சிட்னி, ஆஸ்த்ரேலியா, ஊரடங்கு, கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசி 60 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள சிட்னி நகரில், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரிஜிக்ளியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.சிட்டின் நகரில் 120 வருடங்களில் இல்லாத மிக மோசமான நோய் பரவலை எதிர்கொண்டுள்ளதாக நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழத்தில் தொற்றுநோய்கள் பிரிவிற்கான இணைப் பேராசிரியர் பில் பவ்ட்டெல் கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் 32 சதவீதத்தை அளிக்கும் நியு சவுத் வேலஸில் முழு ஊரடங்கு தொடர்வதால், ஆஸ்திரேலிய பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 27 சதவீத மக்கள் தொகையினருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க, ஆஸ்திரேலிய அரசு விளம்பரங்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.