நாடாளுமன்றத்தில் நடைபெற்ற திருமணம்; நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தாமதமான செய்தியாளர் சந்திப்பு
நியுசிலாந்த் நாடாளுமன்றத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், அமைச்சர் ஒருவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தாமதமானது. இதுபற்றி பார்க்கலாம்.
நியுசிலாந்த் நாடாளுமன்றத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், அமைச்சர் ஒருவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தாமதமானது. இதுபற்றி பார்க்கலாம்.நியுசிலாந்தின் இலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாரா பாலெட் Sarah Pallet திருமணமாகி
விவகாரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். சாரா பாலெட் தனது நீண்ட கால துணைவரான ஆன்டி Andy என்பவரை நியுசிலாந்த் நாடாளுமன்ற கட்டிடத்தில் மணந்தார். சாரா பாலெட், இரண்டு பெண்கள், நியுசிலாந்த நாடாளுமன்றம், பத்திரிக்கையாளர் சந்திப்பு. மணமகள் அலங்காரத்துடன், தனது இரண்டு மகள்களுடன், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சாரா பாலெட் ஊர்வலமாக சென்றார். ஒரு பேக்பைப் (bagpipe) வாத்தியத்தை வாசித்தப்படி அவர்களை ஒருவர் வழிநடத்திச் சென்றார்.அந்த சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு அரங்கில், நியுசிலாந்த் கல்வி அமைச்சர் கிரிஸ்டோபர் ஹிப்கின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த தொடங்கியிருந்தார். அந்த அரங்கின் வழியாக சாரா பாலெட்டின் மணமகள் ஊர்வலம் சென்றதால், செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்க சற்று தாமதமானது.அவர்கள் அந்த அரங்கை கடந்து செல்லும் வரை அமைச்சர் ஜிப்கின்ஸ் பொறுமையாக காத்திருந்தது, செய்தியாளர்களை கவர்ந்தது.