ஹைத்தி அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை - ஹைத்தியில் நடப்பது என்ன...?
அமெரிக்காவிற்கு அருகில் உள்ள சிறிய தீவு நாடான ஹைத்தி, அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு அருகில் உள்ள சிறிய தீவு நாடான ஹைத்தி, அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.1.13 கோடி மக்கள் தொகை கொண்ட ஹைத்தியில், பல ஆண்டுகளாக அதீத வறுமை, வேலையின்மை, அரசியல் குழப்பங்கள் தொடர்கிறன.2016இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோவனல் மொய்ஸ், 2017 பிப்ரவரியில் ஹைட்டியின் அதிபராக பதவியேற்றார்.அவரின் ஆட்சி காலத்தில் அரசுக்கு எதிரான போரட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன.2021 பிப்ரவரியொடு அவரின் பதவி காலம் முடிவடைந்தாக கூறிய எதிர்கட்சிகள், அவரை பதவி விலகக் கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.இந்நிலையில் செவ்வாய் அன்று இரவு ஒரு மணியளவில் ஜோவனல் மொய்ஸ், அவரின் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டர்.படுகாயமடைந்த அவரின் மனைவி மேரி மொய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த கொலையில் ஈடுப்பட்டவர்களில் நால்வரை ஹைட்டி காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைட்டியின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தற்போது, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார். ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.