ஆசிய நாடுகளுக்கு 1.6 கோடி தடுப்பூசி -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஒரு கோடியே 60 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஒரு கோடியே 60 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா சார்பில் உலக நாடுகளுக்கு எட்டு கோடி தடுப்பூசி டோஸ்கள் நன்கொடையாக வழங்கப்படும் என ஜோ பைடன்அறிவித்து இருந்தார். இந்நிலையில் முதல்கட்டமாக ஐந்து கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்குவதற்கான திட்டத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஒரு கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது