ஜோ பைடன் - விளாடிமிர் புதின் சந்திப்பு... ஆயுதப் பரவலை கட்டுப்படுத்த சம்மதம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜெனிவாவில் சந்தித்து பேசினர்.

Update: 2021-06-17 04:13 GMT
ஜோ பைடன் - விளாடிமிர் புதின் சந்திப்பு... ஆயுதப் பரவலை கட்டுப்படுத்த சம்மதம் 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜெனிவாவில் சந்தித்து பேசினர். அப்போது இரு நாட்டு தலைவர்களும் ஆயுதப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர்.சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் ஜோ பைடன் - புதின் சந்திப்பு நடந்தது. பரஸ்பரம் கைகுலுக்கி பேச்சுவார்த்தையை தொடங்கிய இருவரும், அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடைப்பட்ட விவகாரங்கள் குறித்தும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து உள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு தூதர்களையும் மீண்டும் பணிக்கு அனுப்பவதற்கு இருவரும் சம்மதித்து உள்ளனர். மேலும், ஆயுதப்பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு தரவும் முடிவு எடுத்து உள்ளனர். இருப்பினும், அமெரிக்கா மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், நவால்னி கைது சம்பவம், சிரியா உள்நாட்டுப் போர் உள்ளிட்ட விவகாரங்களில் ரஷ்ய அதிபர் புதின் ஆர்வம் காட்டாததால், பேச்சுவார்த்தை எதிர்பார்த்த இலக்குகளை எட்டவில்லை என கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்