உலக அளவில் 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் - 212 நாடுகளில் தடுப்பூசி விநியோகம்

உலக அளவில் இதுவரை 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Update: 2021-06-06 06:08 GMT
 உலக அளவில் இதுவரை 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.... 

உலக நாடுகளுக்கு,  கொரோனா தடுப்பூசி விநியோகம் இந்த வாரத்தில் 200 கோடி டோஸ்களை கடந்து விடும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அயல்வார்ட் கூறியுள்ளார்.

இந்த 200 கோடி தடுப்பூசிகளில் சுமார் 75 சதவீதம் 10 நாடுகளில் மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் 60 சதவீத தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 

இந்த மூன்று நாடுகளிலும் விநியோகிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் அந்ததந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் புரூஸ் அயல்வார்ட் தெரிவித்துள்ளார். 

இதுவரை உலகில் 212 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, 

இவற்றில் 127 நாடுகளுக்கு, ஐ.நாவின் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 200 கோடி தடுப்பூசிகளில் வெறும் அரை சதவீதம் மட்டுமே மிக ஏழ்மையான நாடுகளுக்கு கிடைத்துள்ளதாகவும்,  உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் அந்த நாடுகளில் வசிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஐ.நாவின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி தடுப்பூசிகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவலின் காரணமாக, மேலும் 20 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது  தடைபட்டுள்ளதாகவும் புரூஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்