இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட கட்டிடம் தரைமட்டம்

காசாவில் ஊடகங்கள் செயல்பட்ட 12 மாடி கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தடைமட்டமாக்கியுள்ளது.

Update: 2021-05-17 04:27 GMT
காசாவில் மக்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அகதிகள் முகாம்களில் நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் களத்தில் இருந்து ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்களால் இஸ்ரேலுக்கு பல தரப்பில் கண்டனங்களும், நெருக்கடியும் எழுந்துள்ளது. இந்நிலையில் 12 மாடிகளை கொண்ட அல்-ஜாலா கோபுர கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவம் தகர்த்துள்ளது. இஸ்ரேல் விமானப்படை நாலாபுறமும் ஏவுகணைகளை வீசுகிறது; தீயை கக்கிய வண்ணம் ஏவுகணைகள் வெடிக்கவும் கரும்புகைகள் எழுகிறது; அதற்கு மத்தியில் ஒருபுறமாக கட்டிடம் சரியும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருக்கிறது. கண்மூடி திறப்பதற்குள் இந்த 12 மாடி கட்டிடம் தரை மட்டமானது காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இந்த கட்டிடத்தில்தான் அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. முன்னதாக கட்டிடம் தகர்க்கப்படும் என அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஊடகவியலாளார்களை திகிலுக்கு உள்ளாக்கியிருக்கும் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். உண்மையை மறைக்கவே  ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர். தாக்குதலுக்கு அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்