ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தகவல்

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Update: 2021-05-01 06:32 GMT
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தகவல் 

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஹோன்சு நகரின் வடகிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி எட்டாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 47 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 
Tags:    

மேலும் செய்திகள்