கொரோனா தடுப்பு மருந்து - பிரிட்டன் அரசு தீவிரம்

பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகாவின் கொரோனா தடுப்பு மருந்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

Update: 2020-11-27 12:15 GMT
பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகாவின் கொரோனா தடுப்பு மருந்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பற்றி ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரிட்டனின் மருந்து பொருட்கள் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துமஸுக்கு முன்பாக அவசரகால தேவையாக ஆஸ்ட்ரா செனிகாவின் தடுப்பு மருந்தை பயன்படுத்தவும், பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்