"பைடன் நிர்வாகம் நிலையான சூழலை ஏற்படுத்தும்"- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகம், அரபு பிராந்தியத்தில் நிலையான சூழலை ஏற்படுத்தும் என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அல் சாத் தெரிவித்து உள்ளார்.
காணொலி காட்சி வழியாக நடந்த ஜி-20 மாநாட்டுக்கு இடையே பேசிய அவர், அமெரிக்காவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே 75 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லுறவு தொடர்வதாகவும், பைடன் நிர்வாகம், இந்த உறவை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். டிரம்ப் நிர்வாகத்துடன் தற்போதைய சவுதி அரசு நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.