சைனோவேக் பரிசோதனையை நிறுத்தியது பிரேசில்
சீனாவின் கொரோனா தடுப்பூசியான சைனோவேக் பரிசோதனையை பிரேசில் சுகாதார ஆணையம் நிறுத்திவைத்து திங்களன்று உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் கொரோனா தடுப்பூசியான சைனோவேக் பரிசோதனையை பிரேசில் சுகாதார ஆணையம் நிறுத்திவைத்து திங்களன்று உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து இந்த தடுப்பூசியை பிரேசில் இறக்குமதி செய்யாது என பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரோ தெரிவித்துள்ளார். சீன தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற, தன்னார்வலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சோதனை நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்க முதலே சீன கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அதிபர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த சோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த முடிவு அரசியல் ரீதியிலானது அல்ல என்றும், தன்னார்வலர் தற்கொலை தொடர்பான விசாரணை முடிவின் அடிப்படையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சோதனையை தொடருவதா அல்லது நிறுத்துவதா என முடிவு செய்யப்படும் என பிரேசில் சுகாதார அமைப்பான அன்விசா தெரிவித்துள்ளது.