நிதிச்சந்தையில் நுழைகிறது "வாட்ஸ் அப் பே" - "அனுமதியளித்த முதல் நாடு இந்தியா"- மார்க் ஸூகர்பர்க் நெகிழ்ச்சி

இந்திய நிதிச்சந்தையில் "வாட்ஸ் அப் பே"நிறுவனம் நுழைந்துள்ளது.

Update: 2020-11-07 11:13 GMT
 யு.பி.ஐ. மூலம் இயங்கும் வாட்ஸ் அப் பே செயலி மூலம் பணப்பரிவர்த்தனை சேவைகளை, வாட்ஸ் அப் நிறுவனம் அளிக்க உள்ளது. இத்தகைய அனுமதியை அளித்த முதல் நாடு, இந்தியா தான் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பர்க் ஒரு காணொலியில் கூறியுள்ளார். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள ஏராளமான சிறு, குறு நிறுவனங்களுக்கு இது ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிஜிட்டல் இந்தியாவை வளர்த்தெடுக்கும் பணியில் பங்களிக்க கிடைத்த வாய்ப்பிற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்