கியூபா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை: முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு - ஈரான் வாக்குறுதி
அமெரிக்க அரசின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரான் மற்றும் கியூபா அரசுகளிடையே, உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அமெரிக்க அரசின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரான் மற்றும் கியூபா அரசுகளிடையே, உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதுதொடர்பாக கியூபா தலைநகர் ஹவானாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில், எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக கியூபாவிற்கு, ஈரான் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே, ட்ரம்ப் அரசு பொருளாதார தடை விதித்துள்ள வெனிசுலாவிற்கும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றது குறிப்பிடத்தக்கது.