நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும் பணிகள் தீவிரம் - அதிகாரிகளுக்கு பாக். பிரதமர் இம்ரான் கான் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-10-01 04:41 GMT
ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஷ் ஷெரீப், உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜாமீன் காலம் முடிந்த பிறகும், அவர் பாகிஸ்தான் திரும்பாமல் லண்டனிலேயே தங்கி வந்தார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாஸ் ஷெரீப்பை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறும் போது, நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துவது குறித்து, இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி விண்ணப்பம் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்