உச்சநீதிமன்ற நீதிபதியை செனட் தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு - அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நீதிபதியை தேர்வு செய்யக்கூடாது

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்வு செய்யக்கூடாது என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-27 13:54 GMT
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ரூத் பேடர் மறைவையடுத்து, அப்பதவிக்கு  நீதிபதி எமி கோனே பாரெட் பெயரை டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் ஜோ பிடன், செனட் சபை அதிபர் தேர்தலுக்கு பின்னரே நீதிபதியை நியமனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்,  நீதிபதி எமி கோனே கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ காப்பீடு சட்டத்தை நீட்டிக்கும் விதமான உச்சநீதிமன்றத்தின் முடிவை எதிர்த்தவர் என்றும் 2012-ல் சட்டம் தொடர்பான நீதிபதி ஜோன் ராபர்ட்டின் மெஜாரிட்டியான கருத்தை விமர்சனம் செய்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் முடிவானது தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க மக்கள் அறிவார்கள் என  ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்