நடுவானில் எரிபொருள் காலியானதால் அதிர்ச்சி : அமெரிக்க உளவு விமானத்திற்கு உதவிய ரஷ்யா
எரிபொருள் இன்றி ஆபத்தான நிலையில் தவித்த அமெரிக்க உளவு விமானத்திற்கு ரஷ்யா நடுவானில் உதவியுள்ளது.
எரிபொருள் இன்றி ஆபத்தான நிலையில் தவித்த அமெரிக்க உளவு விமானத்திற்கு ரஷ்யா நடுவானில் உதவியுள்ளது. அமெரிக்காவின் பி-8ஏ போஸிடியோன் என்ற உளவு விமானம் கருங்கடல் பகுதியில் எரிபொருள் காலியானதால் நடுவானில் தவித்துள்ளது. சுற்றிலும் கடல் என்பதால், தரையிரங்க முடியாத ஆபத்தான நிலையில், ரஷ்யாவின் சு-30 என்கிற போர் விமானம் குறிப்பிட்ட தொலைவில் இருந்து எரிபொருள் வழங்கியுள்ளது. இந்த தகவலை கூறியுள்ள ரஷ்ய அரசு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.