2020 இறுதி வரை ஊரடங்கு தேவை - இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தகவல்

இங்கிலாந்தில் நடப்பு ஆண்டின் இறுதி வரையிலும் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

Update: 2020-04-23 09:54 GMT
இங்கிலாந்தில் நடப்பு ஆண்டின் இறுதி வரையிலும் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ பேராசிரியர் கிறிஸ் வைட்டி, கொரோனாவுக்கு சரியான எதிர்ப்பு மருந்து மற்றும் தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டு தான் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறினார். ஊரடங்கு விதிகளை நீக்குவது கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறிய அவர், ஒட்டு மொத்தமாக தடைகளை தளர்த்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக்கூறினார். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் உடனடியாக குறைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் கிறிஸ் வைட்டி கேட்டுக் கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்