கஜகஸ்தான்: பயணிகள் விமானம் கட்டிடம் மீது விழுந்து விபத்து - மீட்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

கஜகஸ்தான் நாட்டில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

Update: 2019-12-27 08:31 GMT
பெக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம்,  அல்மாட்டி நகரில் இருந்து, 95 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் தலைநகர் நூர் சுல்தான் நோக்கி புறப்பட்டது. அப்போது மேலெழும்ப முடியாமல் அங்கிருந்த தடுப்பு வேலி மீது மோதிய அந்த விமானம், அருகிலிருந்த இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர். மீட்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, உடனடியாக ஃபோக்கர் 100 ரக விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் விமான விபத்தில்  உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் காஸிம் ஜோமார்ட் டொகாயேவ் (Kassym-Jomart Tokayev) விபத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என ​தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்