எதிர்க்கட்சியை தடை செய்ய தாய்லாந்து அரசு திட்டம்
பியூச்சர் பார்வர்டு கட்சியை தடைசெய்ய தாய்லாந்து அரசு முயன்ற நிலையில், தலைநகர் பாங்காங்கில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.
பியூச்சர் பார்வர்டு கட்சியை தடைசெய்ய தாய்லாந்து அரசு முயன்ற நிலையில், தலைநகர் பாங்காங்கில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்றதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. அரசை விமர்சித்து வரும் தொழிலதிபரிடம் இருந்து பியூச்சர் பார்வர்டு கட்சி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியை தடைசெய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது