சிறுமி கை கொடுத்ததை கவனிக்காமல் சென்ற இளவரசர் - சிறுமியின் வீட்டிற்கு சென்று மகிழ்வித்த அபுதாபி இளவரசர்

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2019-12-07 06:46 GMT
அபுதாபி இளவரசர்  ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும்  பாராட்டு குவிந்து வருகிறது. அண்மையில் அபுதாபிக்கு சென்ற சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அரண்மனையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் இருநாட்டு கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது  ஆயிஷா என்ற மாணவி அபுதாபி இளவரசருக்கு கைகொடுக்க முயன்ற போது கவனிக்காமல் அவர் சென்று விட்டார். இதனை பின்னர் அறிந்த அபுதாபி  இளவரசர் முகமது பின் சல்மான் சிறுமியின் வீட்டுக்கே சென்று அந்த குழந்தையை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்