"R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய வேண்டும்" - சீனா விருப்பம்
R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்துவிட்ட நிலையில், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்துவிட்ட நிலையில், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியச் சந்தையில் சீனாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் குவியும் அபாயம் உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கெங் சூவாங், R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதை சீனா வரவேற்பதாகவும், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண சீனா முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார்.