ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் விவகாரம் : முடிவை தாமதப்படுத்தக் கோரி எம்.பி.க்கள் வாக்களிப்பு
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பின் போது பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவை தாமதப்படுத்த வேண்டும் என்று 322 எம்.பி.க்களும், ஆதரவாக 306 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரெக்ஸிட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட பொதுமக்கள், மக்களின் வாக்களிப்புக்கு தயாராகுங்கள் என அரசை எச்சரிக்கும் விதமாக ராட்சத பேனரை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். பிரெக்ஸிட்க்கு ஆதரவாக கோடிக்கணக்கில் அரசு செலவு செய்துவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.