ஐ.நா-வில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா : சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

ஐநா. பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை சீனா எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-28 10:14 GMT
ஐ.நா பொதுக்குழுவில்  காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி   அமைதியாகவும் முறையாகவும் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது. ஐ.நா.வில் உரையாற்றிய சீன வெளியுறவு  அமைச்சர் வாங் யி, ஒருதலைபட்சமாக நிலைமையை மாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என கூறினார். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான  சர்ச்சை திறம்பட கையாளப்பட்டு, இரு தரப்பு உறவின் ஸ்திரத்தன்மை மீட்கப்படும் என  சீனா நம்புவதாகவும் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்