லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டார்.

Update: 2019-09-07 09:15 GMT
சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அனேஹூம் என்ற இடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கிருந்த கழிவு நீரை மறு சுழற்சி செய்யும் நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். வீட்டில் இருந்து வரும் கழிவு நீரை பிரித்தெடுத்து சுத்தமாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறையை அந்த மையத்தின் அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கினர். இதன் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது குறித்தும் அந்த நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்