இந்தியா - பாகிஸ்தான் இடையே விரைவில் இறுதிப் போர் - ஷேக் ரஷீத்
இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார். ராவல்பிண்டியில் பேசிய அவர், இறுதி சுதந்திர போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டதாகவும், மொஹரம் பண்டிகைக்கு பிறகு காஷ்மீருக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் முடிவால், காஷ்மீர் அழிவின் விளிம்பில் இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கடுமையாக பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.