பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் உயர் அதிகாரிகளும், அந்நாட்டு வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை, மோடி சந்தித்தார். இருவரும் பழமையான சாண்டலி அரண்மனையை சுற்றி பார்த்தனர். இதைதொடர்ந்து இருதரப்பு உறவுகள் குறித்து இருதலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர், பிரான்ஸ் பிரதமர் எடோவர்ட் சார்லஸ் பிலிப்பை இன்று சந்தித்து பேசும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பாரீசில் வாழும் இந்தியர்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்துக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் பக்ரைன் செல்லும் பிரதமர் மோடி வரும் 25 ந்தேதி பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். அந்த அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்கா விட்டாலும்
நட்பு நாடு என்ற முறையில் அழைப்பு விடுக்கப்பட்டதால் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.