"வடகொரியா மீது வருத்தம் இல்லை" - டிரம்ப்
அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக அமெரிக்க மற்றும் வட கொரியாவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக அமெரிக்க மற்றும் வட கொரியாவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.