உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்?

ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Update: 2019-07-20 04:11 GMT
ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் 14 வது மிகப் பெரிய பணக்காரராக இடம்பெற்றுள்ளார். பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி,  ஹெச். சி. எல் நிறுவனத்தின் ஷிவ் நாடார், கோடக் நிறுவனத்தின்  தலைவர் உதய் கோடாக் ஆகியோரும் பெரும் பணக்காரர்களாக இடம் பெற்றுள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் 8 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது மிகப் பெரிய பணக்காரராக இருந்த பில்கேட்ஸ் தனது சொத்துகளில் குறிப்பிட்ட பகுதியை தானமாக அளித்ததால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்