பெண் எம்.பிக்கள் குறித்து இனவெறி கருத்து - டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்

பெண் எம்.பிக்கள் குறித்து இனவெறி கருத்தை கூறிய டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-18 02:37 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக சமூக வலைதளத்தில் இனவெறி கருத்துக்களை பதிவிட்டது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் இனவெறி கருத்தை கூறிய டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும், எதிராக 187 வாக்குகளும் பதிவாயின.
Tags:    

மேலும் செய்திகள்