தீவிரவாத தடுக்க உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

"மனித குலத்தின் மிக பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம்"

Update: 2019-06-28 05:06 GMT
அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் பயங்கரவாதம் மற்றும் இனவெறி தாக்குதலை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய அவர், மனித குலத்தின் மிக பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம் இருப்பதாக குறிப்பிட்டார். தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் செயல்கள், அனைத்து வழிகளிலும் தடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.  முன்னதாக, மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்காக பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் - மோடி சந்திப்பு

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில்,  பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர் என ஐந்து நாடுகளின் தலைவர்கள் சந்தித்து கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உலக பொருளாதாரம், தீவிரவாதத்தை ஒழிப்பது மற்றும் உலக நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக, பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் மற்றும் அதிபர் டிரம்ப் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  தனிப்பட்ட முறையில் சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் - பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்