சர்வதேச அகதிகள் தினம் இன்று : ஓராண்டில் மட்டும் 7 கோடி பேர் இடம்பெயர்வு

போர் மோதல், துன்புறுத்தல் போன்ற காரணங்களால் கடந்த ஓராண்டு மட்டும் உலகம் முழுவதும் 7 கோடி பேர் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-20 04:18 GMT
போர் மோதல், துன்புறுத்தல் போன்ற காரணங்களால் கடந்த ஓராண்டு மட்டும் உலகம் முழுவதும் 7 கோடி பேர் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பலவந்தமாக இடம்பெயர்ந்தவர்களில் பாதி குழந்தைகள் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அகதிகளில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான், தென் சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வெளியேறிவர்கள் என ஐக்கிய நாடுகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்